Last Updated : 19 Mar, 2020 11:19 AM

 

Published : 19 Mar 2020 11:19 AM
Last Updated : 19 Mar 2020 11:19 AM

கரோனா வைரஸ்: ஜெர்மனி கால்பந்து வீரர்கள் 2.5 மில்லியன் யூரோ உதவி

கரோனா வைரஸ் தொற்று காரமாக ஜெர்மனியில் சாலைகளில் வாகனங்களை பரிசோதிக்கும் மருத்துவ நிபுணர்கள்.

பெர்லின்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் யூரோக்களை (2.7 மில்லியன் அமெரிக்க டாலர்) நன்கொடையாக வழங்குவதாக ஜெர்மன் தேசிய அணி கால்பந்து வீரர்கள் அறிவித்துள்ளனர்.

ஜெர்மனியின் கால்பந்து வீரர்கள் கோவிட் வைரஸ் நோய்த் தொற்று பாதிப்புகள், மரணங்களைக் கட்டுப்படுத்த தங்கள் நிதி உதவிகளை வழங்க முன்வந்துள்ளனர். அது மட்டுமின்றி வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்க்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஜெர்மனி கேப்டன் மானுவல் நியூயர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில், இது போன்ற நேரங்களில் நாம் ஒருவருக்கொருவர் அக்கறை கொள்ள வேண்டும். தேசிய அணியில் நாங்கள் இதுகுறித்து யோசித்தோம், கரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காக 2.5 யூரோ நன்கொடை வழங்க முடிவு செய்துள்ளோம்என்று தெரிவித்துள்ளார். .

ஜெர்மன் கால்பந்து சங்கத்தின் (டி.எஃப்.பி) செய்தியாளர் கூட்டத்தில் தேசிய அணி இயக்குனர் ஆலிவர் பியர்ஹோஃப் கூறுகையில்,

நாங்கள் ஒரு அணியாக செயல்பட விரும்புனோம். அவ்வகையில் இதற்கு கால்பந்து வீரர்கள் மத்தியில் விரைவான உடன்பாடும் ஏற்பட்டது.

இந்த யோசனையை முன்வைத்தவர்களில் மான்செஸ்டர் சிட்டி நட்சத்திரம் இல்கே குண்டோகன், ரியல் மாட்ரிட்டின் டோனி க்ரூஸ் மற்றும் பார்சிலோனா கோல்கீப்பர் மார்க்-ஆண்ட்ரே டெர் ஸ்டீகன் ஆகியோரும் உள்ளனர்

ஜெர்மனியின் தேசிய அணி பயிற்சியாளர் ஜோக்கிம் லோவ் தனது வீட்டிலிருந்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் , உலகமே ஒரு கூட்டு நெருக்கடியைஅனுபவிக்கிறது. இப்படியொரு கடுமையான நெருக்கடி ஏற்பட்ட பிறகாவது மக்கள் நடத்தைகளில் மாற்றம் வேண்டும்.

ஏனெனில் சமீப ஆண்டுகளில் மனிதன் வலிமை, பேராசை மற்றும் லாபம் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறான். இதனால் அவன் இயற்கையையே சூறையாட துணிந்துவிட்டான். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பூமி மனிதகுலத்திற்கு எதிராக தன்னை தற்காத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது,

ஆனால் இப்போதுதான் உண்மையில் வாழ்க்கையில் வலிமை, பேராசை, லாபத்தைவிட முக்கியமானது என்ன என்பதை நாம் உணரத் தொடங்கியுள்ளோம். அது நண்பர்கள், குடும்பம் மற்றும் பிறருக்கு மரியாதை."

"வித்தியாசமாக இருக்க முடியும் என்பதை நாங்கள் காட்ட வேண்டும் என்று நினைத்தால் எதிர்காலத்தில் ஒருவருக்கொருவர் அதிக மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள்.

யூரோ 2020 கால்பந்து போட்டிகளை அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக் யுஇஎஃப்ஏ எடுத்த முடிவு வரவேற்கத்தகுந்தது.

இவ்வாறு தேசிய அணி பயிற்சியாளர் ஜோக்கிம் லோவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x