Published : 18 Mar 2020 06:24 PM
Last Updated : 18 Mar 2020 06:24 PM
கரோனா வைரஸ் தோற்றம் குறித்து பல்வேறு குழப்பமான கருத்துகள் உலவி வரும் வேளையில், இது ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை. பலரும் சொல்வதுபோல இது மனிதன் உருவாக்கியது அல்ல என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தத் தொடங்கியுள்ள கரோனா வைரஸ் இதுவரை 7500க்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. கிட்டத்தட்ட 2 லட்சம் பேரை இந்நோய் பாதித்துள்ளது. இந்நோயின் தோற்றம், அதன் பரவல் குறித்து பல்வேறு வகையான கருத்துகள் நிலவி வருகின்றன. சமீப நாட்களாக இந்த வைரஸ் சீனாவின் ஒரு ஆய்வு நிறுவனத்திலிருநது உருவானதாகவும் அது வேண்டுமென்றே பரப்பப்பட்டதாகவும்கூட கருத்துகள் கூறப்பட்டன.
ஆனால், அமெரிக்க விஞ்ஞானிகள் இதனை மறுத்துள்ளனர். லாப நோக்கமற்ற ஆராய்ச்சி அமைப்பான ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கரோனா வைரஸ் குறித்து உறுதியான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஸ்க்ரிப்ஸில் இதற்கான ஆராய்ச்சியில் தொடர்புடைய நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் இணைப் பேராசிரியர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் இது இயற்கையாக உருவானது என்று தெரிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டில் வெளியான சீனாவில் கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) தொற்றுநோயுடன் கரோனா வைரஸ் அறியப்பட்டது. இதன் இன்னொரு வடிவமாக 2012-ல் சவூதி அரேபியாவில் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS)யுடன் இந்நோய் பரவியது.
தற்போது உருவாகியுள்ள கரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி, 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டு, 7,500க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது. இதன் விளைவாக சீன அதிகாரிகள் தொற்றுநோயின் தீவிரத்தை விரைவாகக் கண்டறிய முடிந்தது.
தொற்றுநோய் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, சீன விஞ்ஞானிகள் SARS - CoV - 2 இன் மரபணுவை வரிசைப்படுத்தி, கரோனா வைரஸ் தரவை உலக அளவில் ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கச் செய்தனர்.
பல ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆண்டர்சன் மற்றும் கூட்டுப் பணியாளர்கள் இந்த வரிசைமுறை தரவைப் பயன்படுத்தி SARS - CoV - 2 இன் தோற்றம் மற்றும் பரிணாமத்தை ஆராய்வதன் மூலம் வைரஸ் பற்றிய பல கதைகளை உருவாக்கும் ஆய்வுப் பாதைகளை நோக்கி அவர்கள் கவனத்தை முடுக்கி விட்டனர்.
இதுகுறித்து நேச்சர் மெடிசன் என்ற அமெரிக்க இதழ் இன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:
''கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் பரவிய பெரிய அளவிலான கோவிட் - 19 தொற்றுநோய் மனிதர்களுக்கு எதிரான மாபெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், கரோனா வைரஸ் எனப்படும் கோவிட் 19 என்பது மனிதன் உருவாக்கியதல்ல.
கரோனா வைரஸ் என்பது ஏற்கெனவே பரவி வந்த சார்ஸ் கோவி-2 என்ற நோய்க்கிருமிகளின் அடுத்தகட்ட இயற்கை பரிணாம வளர்ச்சியின் விளைவாகும்.
கரோனா வைரஸ் ஒரு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. சார்ஸ், கோவி-2 மற்றும் தொடர்புடைய வைரஸ்களிலிருந்து பொது மரபணு வரிசை தரவுகளின் பகுப்பாய்வின்படி ஆய்வகம் தவிர வேறுவிதமாக செயற்கையாக வடிவமைக்கப்பட்டது என்ற கூற்றுக்கும் ஆதாரமில்லை.
கிருமியின் உள்ளடக்குகளில் அமைந்துள்ள ஸ்பைக் புரதங்களுக்கான மரபணு வார்ப்புருவை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
வைரஸின் வெளிப்புறத்தில் உள்ள ஆயுதம் போன்ற சுருள்கள் மனித மற்றும் விலங்கு உயிரணுக்களின் வெளிப்புறச் சுவர்களை எளிதாகப் பிடிக்கவும் ஊடுருவவும் பயன்படுத்துகின்றன.
யாராவது ஒரு புதிய கரோனா வைரஸை ஒரு நோய்க்கிருமியாக வடிவமைக்க முயன்றால், அவர்கள் அதை நோயை ஏற்படுத்தும் ஒரு வைரஸின் முதுகெலும்பிலிருந்து கட்டியிருப்பார்கள்.
ஆனால், இது இயற்கையாக உருவானது என்பதற்கு சார்ஸ் கோவி-2வின் முதுகெலும்பு - அதன் ஒட்டுமொத்த மூலக்கூறு கட்டமைப்பின் தரவுகளால் உருவாகியுள்ளது. இது கிருமிகளையும் உள்ளடக்கிய இயற்கையின் பரிணாம வளர்ச்சியாகும்.
ஆனால் விஞ்ஞானிகள் ஏற்கெனவே அறியப்பட்ட கரோனா வைரஸ்களிலிருந்து தற்போது காணப்பட்டுள்ள கரோனா வைரஸ்களான SARS - CoV - 2வின் முதுகெலும்பு கணிசமாக வேறுபடுவதாகவும், பெரும்பாலும் வெளவால்கள் மற்றும் பாங்கோலின்களில் காணப்படும் தொடர்புடைய வைரஸ்களை ஒத்திருப்பதாகவும் கண்டறிந்தனர்.
வௌவாலிலிருந்து நேரடியாக மனிதனுக்கு மாறியதற்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், மனிதப் பரிமாற்றம், வெளவால்களுக்கும் மனிதர்களுக்குமிடையேயான ஒரு இடைநிலைப் புரவலன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்க வேண்டியள்ளது''.
இவ்வாறு நேச்சர் மெடிசன் ஆய்விதழ் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT