Published : 16 Mar 2020 01:13 PM
Last Updated : 16 Mar 2020 01:13 PM
கரோனா வைரஸ் தாக்கத்தைப் எதிர்த்துப் போராடும் முயற்சியில் பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு (சிபிஎஃப்) அனைத்து தேசிய கால்பந்து போட்டிகளையும் ரத்து செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் உருவாகி இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் 6000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஐரோப்பாவில் மட்டும் 2000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நோய் கனடா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல அமெரிக்க நாடுகளையும் பாதித்துள்ள நிலையில் கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரபல பிரேசில் கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் பிரேசிலிய கோப்பை, முதல் இரண்டு பெண்கள் பிரிவுகள் மற்றும் இரண்டு இளைஞர் சாம்பியன்ஷிப்புகள் ஆகிய போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று சிபிஎஃப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இதுமட்டுமின்றி பிரேசிலின் சீரி ஏ சீசன் மே 3 முதல் டிசம்பர் 6 வரை நடைபெற திட்டமிடப்பட்டது. மேலும் அறிவிப்பு வரும் வரை கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் ரத்து நடவடிக்கை தொடரும்.
இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் போட்டிகளை நிறுத்தலாமா என்பதை மாநில கூட்டமைப்புகள் முடிவு செய்யும்.
கோபாவின் லிபர்ட்டடோர்ஸ் தென் அமெரிக்காவின் சிறந்த கால்பந்து போட்டியில் இந்த வாரம் திட்டமிடப்பட்ட போட்டிகளை தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு (CONMEBOL) இடைநிறுத்திய மூன்று நாட்களுக்குப் பிறகு பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் (BFC) முடிவு வந்துள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, மெக்ஸிகோவின் FA, நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் நாட்டின் முதல் இரண்டு கால்பந்து பிரிவை நிறுத்தியதாகக் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT