Published : 15 Mar 2020 04:43 PM
Last Updated : 15 Mar 2020 04:43 PM
கரோனா பாதிக்கப்பட்ட கத்தாரிலிருந்து அவசரம் அவசரமாகத் திரும்பிய லினோ ஆபெல் என்ற கேரளா நபர், மருத்துவமனையில் சீரியஸாக அனுமதிக்கப்பட்ட தன் தந்தையைப் பார்க்க வந்தபோது கரோனா பாதிப்பு இருக்கக் கூடும் என்பதால் தானே கோட்டயம் மருத்துவமனையில் அனுமதித்துக் கொண்டார். இவருக்கு லேசான இருமல் இருந்ததையடுத்து இவர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
ஆனால் இவரது தந்தை கட்டிலிலிருந்து கீழே விழுந்து பாதிக்கப்பட்டதால் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மார்ச் 8ம் தேதி லினோ ஆபெல் வந்தார். ஆனால் கோவிட் -19 சந்தேகம் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மார்ச் 9ம் தேதி அவரது தந்தை ஸ்ட்ரோக் ஏற்பட அதே மருத்துவமனையில் மரணமடைந்தார்.
கடைசியாக தந்தையின் முகத்தையாவது பார்த்து விட வேண்டும் என்ற வந்த ஆபெலுக்கு கடைசியில் தன் தந்தையின் உடலை ஆம்புலன்ஸில் இறுதிச் சடங்குக்காக வீட்டுக்கு எடுத்துச் சென்ற காட்சியைத்தான் காண முடிந்தது. ஜன்னல் வழியாக தந்தையின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்படுவதை பார்ப்பது தவிர இவருக்கு வேறு வழி யில்லை. ஆனால் தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ மூலம் பார்த்தார்.
”நானே வந்து அட்மிட் ஆகாமல் இருந்திருந்தால் கடைசியாக என் தந்தையை நான் ஒருமுறை பார்த்திருப்பேன், நான் ரிஸ்க் எடுக்கவில்லை ஏனெனில் எனக்கு கரோனா இருந்தால் அதனை நான் பரப்பி விடக்கூடாது என்பதற்காகத்தான்.
கரோனா சிகிச்சைக்காக முழு ஒத்துழைப்பையும் அளித்து தன் தந்தையும் இழப்பையும் தாங்கி கொண்ட இவருக்கு முதல்வர் பினராயி விஜயன் உட்பட பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
இவரது ரத்த மாதிரிகளில் கரோனா இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை எனறு சனிக்கிழமை அன்று தெரியவந்தது, இதனையடுத்து தந்தையை இழந்த கனத்த இதயத்துடன் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான தொடுப்புழாவுக்கு அவர் செல்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT