Published : 15 Mar 2020 11:56 AM
Last Updated : 15 Mar 2020 11:56 AM
வெளிநாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் எவரும் கட்டாயமாக 14 நாள் சுய-தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள நேரிடும்; இது வைரஸைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சிதான் என்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக இதுவரை உலகம் முழுவதும் ஒன்றரை லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளது.
பல உலக நாடுகளும் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளின் போக்குவரத்தை தடை செய்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா இதிலிருந்து மாறுபட்டு நாட்டுக்குள் வருவதை தடை செய்யாமல் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
இதுகுறித்து இன்று ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்கார் ஜான் மோரிஸன் கூறியுள்ளதாவது:
எங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் சில மாற்றங்களை செய்யவேண்டியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து எங்கள் நாட்டிற்கு வரும் எவரும் கட்டாயமாக 14 நாள் சுய-தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள நேரிடும்; இது வைரஸைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சி மட்டுமல்ல, எங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியுமாகும்.
இந்த அவசர நடைமுறை ஞாயிறு அதிகாலை 1 மணியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.
அனைத்து பயணக் கப்பல்களும் முற்றிலுமாக தடை செய்யப்படும். இதனால் ஆஸ்திரேலியாவை பார்வையிட வருபவர்களின் போக்குவரத்து மிக விரைவாக வறண்டு போகும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஆஸ்திரேலியாவில் ஏற்கெனவே 269 பேருக்கு கோவிட் 19 வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது, இப்போது அமெரிக்காவிலிருந்து வந்துள்ளவர்களின் புதிய எண்ணிக்கை வேறு கூடியுள்ளது. இதுவே எங்கள் நடவடிக்கைக்கு முக்கியமான ஆதாரம்.
இவ்வாறு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்கார் ஜான் மோரிஸன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT