Published : 13 Mar 2020 01:16 PM
Last Updated : 13 Mar 2020 01:16 PM
கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஒரு உணர்வற்ற தடுமாற்றத்தில் மோடி அரசாங்கம் இருக்கிறது; வலுவான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பொருளாதாரம் அழிக்கப்பட்டு விடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
சீனாவிலிருந்து உருவான கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக இதுவரை 4000த்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். உலகின் பெரும்பாலான நாடுகளை பாதித்துவந்த கோவிட் 19 காய்ச்சல்6 தற்போது இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் 73 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவைரஸ் பாதிப்பில் நேற்று கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார்.
முன்னதாக இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, கரோனா வைரஸைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம், மருத்துவர்கள் சொல்வதை பின்பற்றுங்கள் என்று மக்களிடம் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஈரானில் சிக்கிய இந்தியர்களை மீட்கப்படும் நடவடிக்கைகளைப் பற்றி நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் கரோனா பற்றிய பீதியை மக்களிடம் பரப்பி அவர்களை அச்சமடைய செய்ய விருப்பமில்லை என்று தெரிவித்தார்.
தற்போது மத்திய அரசு மாநிலங்கள்தோறும் கரோனா வைரஸுக்கான ஹெல்ப் லைனையும் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கெனவே எச்சரித்து ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் கரோனா வைரஸ் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று எச்சரித்திருந்தார்.
தற்போது அந்த ட்வீட்டை இடுகையை மீண்டும் மறு ட்வீட் செய்து அதனுடன் புதியதாக ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:
''தொற்று நோய் ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஆகும். அதைப் புறக்கணிப்பது அதற்கான தீர்வாக இருக்க முடியாது. நான் இதை மீண்டும் கூறுவேன். கரோனா வைரஸ் ஒரு பெரிய பிரச்சினை.
பிரச்சினையை புறக்கணிப்பது ஒரு தீர்வு அல்ல, இப்பிரச்சனையில் மோடி அரசாங்கம் உணர்வற்ற தன்மையுடன் கூடிய தடுமாற்றத்தில் உள்ளது. வலுவான நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய பொருளாதாரம் அழிக்கப்பட்டுவிடும்.''
இவ்வாறு ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT