Published : 11 Mar 2020 05:48 PM
Last Updated : 11 Mar 2020 05:48 PM
சீனாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டவர், 69 மணிநேரத்துக்குப் பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 119 நாடுகளில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 220 பேருக்கு கோவிட் காய்ச்சல் பாதிப்புள்ளது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 66 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட் -19 காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா அறிகுறி இருப்பவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களுக்குத் தடுப்புக் காவல் அமைத்து, சீன அரசு சிகிச்சை அளித்து வருகிறது. அந்த வகையில், 70-க்கும் மேற்பட்டோர், அண்மையில் பெய்ஜிங்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன. இதற்கிடையே ஓட்டல் கட்டிடம் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருந்ததால் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது.
இதில், 20 பேர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தனர். 41 பேர் இடிபாடுகளுக்கிடையே மீட்கப்பட்டனர். 9-க்கும் மேற்பட்டோர் கட்டிடக் குவியலில் சிக்கியுள்ளனர். இதில் ஒருவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் 69 மணிநேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே குவான்ஸ்ஹூ செய்தி நிறுவனம், ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT