Last Updated : 10 Mar, 2020 07:19 PM

 

Published : 10 Mar 2020 07:19 PM
Last Updated : 10 Mar 2020 07:19 PM

கரோனா வைரஸும் சில மூட நம்பிக்கைகளும்: சீனப் பொருட்கள் மூலம் கரோனா பரவுமா?

பிரதிநிதித்துவப்படம்

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் அது தொடர்பான வதந்திகளும், மூட நம்பிக்கைகளும் பரவி வருகின்றன. கரோனா வைரஸுக்கு இதுவரை எந்தவிதமான தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலையில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

குளிர்ந்த காலநிலை, பனிப்பொழிவு கோவிட்-19 நோயைக் கொல்லுமா?

குளிர்ந்த காலநிலை, பனி ஆகியவை கோவிட்- 19 உள்ளிட்ட எந்த நோயையும் அழிக்க முடியாது. வெளிப்புற காலநிலை, வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் மனித உடலில் இயல்பான வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். ஆதலால், குளிர்ந்த காலநிலை, பனியால் கோவிட்-19 சாகாது.

சூடான தண்ணீரில் குளித்தால் கோவிட்-19 நோய் போய்விடுமா?

சூடான தண்ணீரில் குளித்தால் கோவிட்-19 வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பது சொல்வது பொய். வெளிப்புறக் காலநிலை, வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் மனித உடலில் இயல்பான வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். உண்மையில் அதிகமான சூட்டில் தண்ணீரை ஊற்றிக் குளிக்க நேர்ந்தால் அது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். தோலின் மேற்பகுதி பாதிப்படையும். ஆதலால் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் ஆல்கஹால் கலந்த சுத்தம் செய்யும் திரவம் மூலம் கைகளைக் கழுவுவதன் மூலம் தற்காத்துக்கொள்ள முடியும்.

சீனா மற்றும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நாடுகளில் இருந்து வந்த பொருட்கள் மூலம் கரோனா பரவுமா?

இது தவறான கண்ணோட்டம். கோவிட்-19 வைரஸ் தரைதளத்தில் சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள்வரை உயிர் வாழக்கூடியது. எந்தவிதமான தரைதளம் என்பதைப் பொறுத்து கோவிட்-19 உயிர் வாழும். பல்வேறு விதமான காலநிலை, வெப்பநிலை ஆகியவற்றுக்கு நகரும்போதும், பயணிக்கும் போதும் தரைதளத்தில் இருக்கும் வைரஸ் எந்த அளவுக்கு உயிர் வாழும் என்பது கூற முடியாது. ஒருவேளை அந்தத் தரைதளம் மோசமான கிருமித் தொற்றாக இருந்தால், அதை நீங்கள் தொடுவதாக இருந்தால், அதன்பின் கைகளை சோப்பு மற்றும் ஆல்கஹால் கலந்த சுத்தம் செய்யும் திரவம் மூலம் கைகளை கழுவுவதன் மூலம் தற்காத்துக்கொள்ள முடியும்

கோவிட்-19 வைரஸைத் தடுக்க பிரத்யேக மருந்து இருக்கிறதா அல்லது சிகிச்சை முறை இருக்கிறதா?

இப்போதுவரை கோவிட்-19 வைரஸைத் தடுக்க எந்தத் தடுப்பு மருந்தும் இல்லை, சிகிச்சை முறையும் இல்லை. அதன் அறிகுறிகளுக்குத் தேவையான சிகிச்சையும், கவனிப்பும் தரப்படும். தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சில பிரத்யேக சிகிச்சை முறை குறித்த ஆய்வாளர்கள் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹேர் ட்ரையர் மூலம் கோவிட்-19 வைரஸைக் கொல்ல முடியுமா?

இல்லை, ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதன் மூலம் கோவி்ட்-19 வைரஸை அழிக்க முடியாது. கோவிட்-19 வைரஸிருந்து தற்காத்துக்கொள்ள சிறந்த வழி, கைகளை சோப்பு மற்றும் ஆல்கஹால் கலந்த சுத்தம் செய்யும் திரவம் மூலம் கழுவ வேண்டும்.

அல்ட்ரா வைலட் விளக்கு மூலம் கோவிட்-19 வைரஸை அழிக்க முடியுமா?

அல்ட்ரா வைலட் விளக்குள் மூலம் கைகளைச் சுத்தம் செய்ய முடியாது. உடலின் எந்தப் பகுதியையும் சுத்தம் செய்ய முடியாது. கோவிட்-19 வைரஸை யுவி விளக்குகள் மூலம் அழிக்கவும் முடியாது. கோவிட்-19 வைரஸிருந்து தற்காத்துக்கொள்ள சிறந்த வழி கைகளை சோப்பு மற்றும் ஆல்கஹால் கலந்த சுத்தம் செய்யும் திரவம் மூலம் கழுவ வேண்டும்.

ஆதாரம்: உலக சுகாதார அமைப்பு(WHO)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x