Published : 01 Dec 2016 02:55 PM
Last Updated : 01 Dec 2016 02:55 PM
நவம்பர் 21 முதல் 28 வரை கோவாவில் நடைபெற்ற 47-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா திங்கள்கிழமை மாலை விருதுகள் வழங்கும் விழாவுடன் நிறைவுற்றது. உலகெங்கும் இருந்து திரைப்பட ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர். பல்வேறு மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
* சர்வதேச போட்டிப் பிரிவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 திரைப்படங்கள் போட்டியிட்டன. இதில் ஈரான் நாட்டைச் சேர்ந்த 'டாட்டர்' (Daughter) திரைப்படம் சிறந்த படத்துக்கான தங்க மயில் விருதினைப் பெற்றது.
* 'டாட்டர்' படத்தில் நடித்த ஃபர்ஹ்த் அஸ்லனி (Farhad Aslani) சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
* சிறந்த நடிகைக்கான விருதை லடிவாவைச் சேர்ந்த 'மெல்லோ மட்' திரைப்படத்தில் நடித்த எலினா வெஸ்கா (Elina Veska) வென்றார்.
* சிறந்த இயக்குநருக்கான விருதை துருக்கி நாட்டைச் சேர்ந்த ரவுஃப் (Rauf) திரைப்படத்தை இயக்கிய ஸோனெர் கனெர் (Soner Caner) மற்றும் பரிஸ் கயா (Baris Kaya) ஆகியோர் பெற்றனர்.
* தென் கொரிய இயக்குநரான லீ ஜோன் இக் (Lee Joon Ik) 'த த்ரோன்' (The Throne) படத்துக்காக சிறப்பு ஜூரி விருதை வென்றார்.
* ICFT யுனெஸ்கோ காந்தி (International Counsil for Film, Television and Audiovisual Communicatin- Unesco Gandhi Medal) விருதை முஸ்தபா கரா (Mustafa Kara) இயக்கிய 'கோல்ட் ஆஃப் கலந்தர்' (Cold Of Kalandar) திரைப்படம் பெற்றது.
* ICFT யுனெஸ்கோ காந்தி சிறப்பு விருதை டிஃப்பானி ஹ்சுஇங் (Tiffany Hsuing) இயக்கிய 'த அப்பாலஜி' (The Apolpgy) திரைப்படம் பெற்றது.
* CABDF (Centenary Award for the Best Debut Feature) சிறந்த புதுமுகத்துக்கான நூற்றாண்டு விருதை பெப்பா சன் மார்டின் (Pepa San Martin) இயக்கிய ஸ்பானிஷ் திரைப்படமான 'ராரா' (Rara) பெற்றது.
* தென் கொரிய திரைப்பட இயக்குநர் இம் வோன் டீக்-குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
* திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இந்த ஆண்டின் இந்திய திரை ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கோவா திரைப்பட விழா விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ராஜமௌலி, தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சரான ராஜ்யவர்தன் ரத்தோர் மற்றும் கோவா முதல்வர் லஷ்மிகாந்த் பார்சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT