Published : 29 May 2022 12:02 AM
Last Updated : 29 May 2022 12:02 AM
அறிமுக இயக்குநர் சைம் சாதிக் இயக்கிய பாகிஸ்தானிய படமான 'ஜாய்லேண்ட்' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'அன் சர்டைன் ரிகார்ட்' (Un Certain Regard) பிரிவில் ஜூரி விருது வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேன்ஸ் பட விழாவில் முதன்முறையாக பாகிஸ்தானிய படம் விருது வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உயரிய விருதாக கருதப்படும் 'அன் செர்டெய்ன் ரிகார்ட்' பிரிவின் ஜூரி விருதுக்கு இத்தாலிய தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகையுமான வலேரியா கோலினோ தலைமை தாங்கினார்.
இதில், ஆணாதிக்கத்தில் ஊறியிருக்கும் ஒரு குடும்பத்தைப்பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட 'ஜாயிலேண்ட்' திரைப்படம் 'அன் சர்டைன் ரிகார்ட்' பிரிவில் ஜூரி விருதை வென்றுள்ளது. அறிமுக இயக்குநர் சைம் சாதிக் எழுதி இயக்கியது இந்தப் படம்,
துணைக் கண்டத்திலிருந்து விருது பெறும் முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்த விருதின் மூலம் பாகிஸ்தானிய திரைப்படத் துறை உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. 'அன் செர்டெய்ன் ரிகார்ட்' பிரிவில் சிறந்த இயக்குநருக்கான விருதை 'மெட்ரோனாம்' (Metronom) படத்துக்காக ரோமானிய இயக்குனர் அலெக்ஸாண்ட்ரே பெல்க் பெற்றார். அதேபோல மெட்டிரேனியர் ஃபீவர் (Mediterranean Fever) படத்துக்காக சிறந்த திரைக்கதைக்கான விருதை இஸ்ரேலிய பாலஸ்தீன இயக்குநர் மஹா ஹஜ் மெட் பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT