Published : 14 Mar 2022 01:49 PM
Last Updated : 14 Mar 2022 01:49 PM

BAFTA 2022 விருதுகள் பட்டியல் | பாஃப்டா விழாவில் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி

லண்டன்: 75-வது பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் (பாஃப்டா) விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த பாடகர் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறந்த படம் உள்ளிட்ட பல விருதுகளை ’தி பவர் ஆஃப் தி டாக்’ திரைப்படம் அள்ளியது. 2022 பாஃப்டாவில் சிறந்த நடிகர் விருதை வில் ஸ்மித் தட்டிச் சென்றார்.

லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி: இந்தியாவின் பிரபல பாடகர் லதா மங்கேஷ்கருக்கு பாஃப்டா விருது நிகழ்வில் சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. லதா மங்கேஷ்கர் குறித்து, பாஃப்டா இணைய பக்கத்தில், "இந்திய பிண்ணனி பாடகர். தன்னுடைய 70 ஆண்டு கால சினிமா பயணத்தில் 1000-க்கும் அதிகமான இந்தி படங்களில் இவர் பாடியுள்ளார். ராயல் ஆல்பர்ட் மஹாலில் பாடிய முதல் இந்திய பாடகர் இவர்தான். அனாமிகா, தில் சே, ரங் தே பசன் தி உள்ளிட்ட படங்களில் இவர் பாடிய பாடல்கள் குறிப்பிடத்தகவை. இந்தியாவின் உயரிய விருதான ’பாரத ரத்னா’ இவருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று பதிவிடப்பட்டுள்ளது.

ரிபிள் வில்சன் தொகுத்து வழங்கிய இந்த விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. அதன் விவரம்:

சிறந்த படம்: ’The Power of the Dog’

சிறந்த அயல் நாட்டு படம்: 'Drive My Car'

சிறந்த அனிமேஷன் படம்: 'Encanto'

சிறந்த ஆவணப்படம்: Summer of Sou

சிறந்த பிரிட்டிஷ் படம்: Belfast

சிறந்த பிரிட்டிஷ் இயக்குநர்: 'The Harder They Fall' – Jeymes Samuel

சிறந்த இயக்குநர்: 'The Power of the Dog'-Jane Campion

சிறந்த திரைக்கதை: 'Licorice Pizza' – Paul Thomas Anderson

சிறந்த நடிகர்: 'King Richard'- Will Smith

சிறந்த நடிகை : 'After Love' - Joanna Scanlan

சிறந்த உறுதுணை நடிகர்: 'West Side Story' - Ariana DeBose

சிறந்த உறுதுணை நடிகர்: 'CODA' - Troy Kotsur

சிறந்த இசை: 'Dune' – Hans Zimmer

சிறந்த ஒளிப்பதிவு: 'Dune' – Greig Fraser

சிறந்த எடிட்டிங்: 'No Time to Die' – Tom Cross, Elliot Graham

சிறந்த நம்பிக்கை நட்சத்திரம்: Lashana Lynch

சிறந்த ஆடை வடிவமைப்பு: 'Cruella' – Jenny Beavan

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x