Published : 22 Oct 2017 08:18 PM
Last Updated : 22 Oct 2017 08:18 PM
விஜய் ஒரு கிறிஸ்தவர் என நிரூபிக்கும் வகையில் மீண்டும் ட்வீட் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் எச்.ராஜா
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது
"சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம்.ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
இதனால் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக அவரைச் சாடத் தொடங்கினார். இதனால் பெரும் சர்ச்சை உருவானது. அவர் என்ன ட்வீட் செய்தாலும், அதற்கு பதிலடியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மேலும் சர்ச்சையை உருவாக்கும் வகையில், விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பத்திரிகை நிறுவனத்திற்கு விஜய் எழுதிய கடிதம் ஆகிய இரண்டையும் பதிவிட்டு 'உண்மை கசப்பானது' என்று ட்வீட் செய்திருக்கிறார் எச்.ராஜா. இதனால் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது.
எச்.ராஜாவுக்கு பதிலடியாக அவருடைய ட்வீட்டிற்கு கீழேயே பலரும் கடுமையாக சாடி வருகிறார்கள்.
எச்.ராஜா ட்வீட் இணைப்பு:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT