Published : 16 Oct 2017 02:32 PM
Last Updated : 16 Oct 2017 02:32 PM
விவசாயிகளைக் காக்க தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாண்டிராஜ் புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழக அரசுடன் நடைபெற்ற திரையரங்க டிக்கெட் விற்பனை மற்றும் கேளிக்கை வரி தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து MRP விலையில் மட்டுமே திரையரங்க கேண்டீனில் உணவுகள் விற்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், திரையரங்க உரிமையாளர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் "இனிமேல் MRP விலையிலேயே விற்போம்" என்று அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் 1500 திரையரங்குகள் உள்ளது. இவற்றின் விற்பனையகத்தில் இளநீர், கரும்புச்சாறு, மோர் மற்றும் பழச்சாறு வகைகளை விற்பனை செய்வதற்கு திரையரங்க உரிமையாளர் உதவினாலே போதும். விவசாயமும், விவசாயியும் வாழ்வார்கள். விவசாயத்தை வாழ வைக்க முயற்சிகள் நடக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாண்டிராஜின் கோரிக்கையை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்பார்களா என்பது விரைவில் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT