Published : 16 May 2023 03:31 PM
Last Updated : 16 May 2023 03:31 PM
‘பாரதி கண்ணம்மா’, ‘சரவணன் மீனாட்சி’ சீரியல்களில் நடித்து கவனம் பெற்ற பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70.
1980-களில் நடிகர்கள் ரஜினி, கமல் படங்களில் சின்னஞ்சிறு வேடங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. 1976-ம் ஆண்டு வெளியான ‘ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், சின்னத்திரை தொடர்களில் அதிகம் கவனம் செலுத்தினார்.
கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட சின்னத்திரைத் தொடர்களில் நடித்த விஜயலட்சுமி ‘சரவணன் மீனாட்சி’, ‘பாரதி கண்ணம்மா’ தொடர்கள் மூலம் கவனம் பெற்றார். பெரும்பாலும் எதிர்மறை கதாபாத்திரங்களின் மூலம் அடையாளம் பெற்றவர் விஜயலட்சுமி.
அண்மையில், தலையில் அடிப்பட்டு அதற்கான சிகிச்சைக்குப்பின் மருத்துவமனையிலிருந்து நடிகை விஜயலட்சுமி வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், நேற்று தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...