Last Updated : 24 Oct, 2017 03:21 PM

 

Published : 24 Oct 2017 03:21 PM
Last Updated : 24 Oct 2017 03:21 PM

விஜய் குறித்த சர்ச்சை: எச்.ராஜாவுக்கு சின்மயி பதிலடி

விஜய் குறித்த சர்ச்சைப் பதிவு தொடர்பாக பாஜக-வின் எச்.ராஜாவுக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்திருக்கிறார்.

'மெர்சல்' படத்தின் வசனங்கள் சர்ச்சையானதிலிருந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான எச்.ராஜா.

ஜோசப் விஜய் என்று அவர் குறிப்பிட்டதிலிருந்தே, அவரை ட்விட்டர் தளத்தில் கடுமையாக சாடி வருகிறார்கள். சமீபத்தில் மேலும் சர்ச்சையை உருவாக்கும் வகையில், விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஒரு பத்திரிகை நிறுவனத்திற்கு விஜய் எழுதிய கடிதம் ஆகிய இரண்டையும் பதிவிட்டு "உண்மை கசப்பானது" என்று ட்வீட் செய்தார் எச்.ராஜா. இதனால் மீண்டும் சர்ச்சை உருவானது.

இந்த சர்ச்சை குறித்து பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

எது கசப்பானது? ஒரு குடிமகனின் தனிப்பட்ட அரசு அடையாள அட்டையை, அவரது அனுமதியின்றி சமூக வலைதளத்தில் பகிர்வது சட்டப்பூர்வமானதா? நாளை இன்னும் சில விஷயங்களை நிரூபிக்க ஆதார் அட்டையும் பகிரப்படுமா?

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x