Published : 13 May 2023 08:47 PM
Last Updated : 13 May 2023 08:47 PM
“வெறுப்பையும் மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி” என கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 136 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவையான நிலையில் 136 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. பாஜக இதுவரை 65 இடங்களில் வெற்று பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால், கர்நாடகாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், ““வெறுப்பையும் மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
Thank you Karnataka for Kicking OUT Hatred and Bigotry ..The Emperor is NAKED … ದ್ವೇಶ…ಬೂಟಾಟಿಕೆಯನ್ನು …ಓದ್ದೋಡಿಸಿದ ಸ್ವಾಭಿಮಾನಿ ಕನ್ನಡಿಗರಿಗೆ ದನ್ಯವಾದಗಳು …..ಬೆತ್ತಲೆಯಾದ ಚಕ್ರವರ್ತಿ.#justasking pic.twitter.com/pVD4GuuaQO
— Prakash Raj (@prakashraaj) May 13, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT