Published : 27 Oct 2017 01:01 PM
Last Updated : 27 Oct 2017 01:01 PM
தனது அடுத்த படத்திலிருந்து 'சின்ன இளையதளபதி' பட்டம் போடவுள்ளதாக வெளியான செய்திக்கு ஜி.வி.பிரகாஷ் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
'செம', 'நாச்சியார்', 'அடங்காதே' உள்ளிட்ட படங்கள் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ளன. விரைவில் தணிக்கைச் செய்யப்பட்டு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தனது அடுத்த வெளியீட்டு படங்களிலிருந்து 'சின்ன இளையதளபதி' என்ற தலைப்பை தனது பெயருக்கு முன்பு போட ஜி.வி.பிரகாஷ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல் குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேவையற்ற செய்தி. யாரும் எந்தப் பெயரையும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள். விஜய் எனது சகோதரர். நான் அவரது ரசிகன், தம்பியைப் போன்றவன். இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புவதால் இவர்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கும் எனத் தெரியவில்லை. இதுபோன்றவற்றைப் பார்க்கும்போது எரிச்சலாக வருகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போது '100% காதல்' படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற '100% லவ்' படத்தின் தமிழ் ரீமேக்காகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT