Published : 11 May 2023 05:05 PM
Last Updated : 11 May 2023 05:05 PM

ஒருசில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதாக பொய்யான தகவல் - இராவண கோட்டம் படக்குழு 

சென்னை: இராவண கோட்டம் படத்தில் ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது. இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை. தயவுகூர்ந்து வதந்திகளை நம்பி படத்தின் மீது தடை கோருவதும் படத்தை தடுக்கும் நோக்கிலான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என்று அந்த படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில், மண் சார்ந்த கதையை, மனிதத்தை, அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே எங்கள் "இராவண கோட்டம்" திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். KRG Group of Companies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஷாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க கற்பனையில் உருவாக்கப்பட்ட கதையாகும். எந்த வகையிலும் இனம், மொழி சார்ந்து யாரையும் காயப்படுத்தும் வகையில் எந்த ஒரு காட்சியும் படத்தில் உருவாக்கப்படவில்லை.

நேற்று நடந்த பத்திரிகையாளர் முன் வெளியீட்டு காட்சி மற்றும் பிரத்யேக காட்சியில் படம் பார்த்த பத்திரிகை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள், நண்பர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர் மற்றும் மக்களிடையேயான ஒற்றுமையும் அன்பையும் போற்றும் இப்படத்தின் கருவை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

படத்தில் ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது. இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை. தயவுகூர்ந்து வதந்திகளை நம்பி படத்தின் மீது தடை கோருவதும் படத்தை தடுக்கும் நோக்கிலான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x