Published : 04 Oct 2017 08:46 PM
Last Updated : 04 Oct 2017 08:46 PM
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படத்துக்கு 'நிமிர்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
'பொதுவாக எம்மனசு தங்கம்' மற்றும் 'இப்படை வெல்லும்' ஆகிய படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிவுள்ளது. குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தை ஒரே கட்டமாக முடித்துள்ளார் இயக்குநர் ப்ரியதர்ஷன்.
இயக்குநர் மகேந்திரன், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்டோர் படத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழ் ரீமேக்கிற்கு சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார்கள்.
இப்படத்தின் தலைப்பை மலையாள நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'நிமிர்' என்று பெயரிடப்படுள்ள இப்படம் டிசம்பர் வெளியீடாக திரைக்கு கொண்டுவர படக்குழு தீர்மானித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT