Published : 16 Sep 2017 03:01 PM
Last Updated : 16 Sep 2017 03:01 PM
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'நரகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் இன்று (செப்டம்பர் 15) தொடங்கப்பட்டுள்ளது.
'துருவங்கள் பதினாறு' இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'நரகாசூரன்' படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி இன்று (செப்டம்பர் 16) முதல் ஊட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கவுதம் மேனன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். 'துருவங்கள் பதினாறு போலவே ஊட்டி பின்னணியில் இப்படத்தையும் இயக்க முடிவு செய்துள்ளார் கார்த்திக் நரேன்.
மேலும், 'துருவங்கள் பதினாறு' போல இப்படத்தையும் பாடல்கள் ஏதுமின்றி உருவாக்க முடிவு செய்துள்ளார்கள். அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT