Published : 18 Sep 2017 07:46 PM
Last Updated : 18 Sep 2017 07:46 PM
ரஜினி எனது படங்களை உன்னிப்பாக கவனித்து வருவதில் பெருமையாக இருப்பதாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கமல் தெரிவித்தார்.
கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வையாபுரி வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கமலுடன் கலந்துரையாடினார். முதலில், 80 நாட்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் செய்த விஷயங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு திரையிடப்பட்டது. அப்போது வையாபுரி மிகவும் கண்கலங்கினார்.
அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களைப் பற்றி ஒவ்வொரு வரியில் சொல்லுங்கள் என்று கேட்டார் கமல். அனைவருக்குமே மிக நீண்ட பதிலாக கூறினார் வையாபுரி. மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களின் செய்கைகளை வையாபுரியை செய்துக் காட்டச் சொல்லி, அதனை பார்வையாளர்கள் யார் என்று கண்டுபிடிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அதிலும் ஒவ்வொருவரையும் பற்றி மிக நீளமாக செய்துக் காட்டினார். அப்போது கமல் "இன்னும் சுருக்கமா.. இன்னும் சுருக்கமா" என்று கேட்டிக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய வையாபுரி, "கமல் சாருடன் இணைந்து 12 படங்களில் நடித்துள்ளேன். அதனை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. மேலும், வாழ்க்கையிலும் மறக்க முடியாது" என்று குறிப்பிட்டார். மேலும், ஒரு முறை ரஜினி சாரை சந்தித்த போது "நாம் இதுவரை ஒரு படம் கூட இணைந்து நடித்ததில்லை. ஆனால், கமலுடன் நிறைய படங்களில் நடித்துள்ளீர்கள் சரியா?" என்று கேட்டதாக வையாபுரி தனது பேச்சில் தெரிவித்தார்.
அப்போது இடைமறித்து பேசிய கமல், "ரஜினிகாந்த் எனது படங்களை உன்னிப்பாக கவனித்து வருவது பெருமையாக இருக்கிறது" என்று பதிலளித்தார். இப்பதிலுக்கு பார்வையாளர்கள் கரகோஷம் செய்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT