Published : 18 Sep 2017 07:46 PM
Last Updated : 18 Sep 2017 07:46 PM
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வுக்கு தங்க டிக்கெட்டை வென்று, முதல் ஆளாக தேர்வானார் சிநேகன்.
100 நாள் நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட 'பிக் பாஸ்' சீசன் 1, செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிவடையவுள்ளது. இதனால் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று சிநேகன், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, சுஜா, ஹரிஷ், ஆரவ், வையாபுரி ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவியது.
வையாபுரி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக தகுதி பெறும் நபர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கான புள்ளிகளில் 39 புள்ளிகள் பெற்றும் முதல் ஆளாக தங்க டிக்கெட்டை கைப்பற்றி இறுதிப் போட்டி தேர்வானார்.
இனிமேல் வரும் வாரங்களில் பிக் பாஸ் போட்டியாளர்களில், யாருமே சிநேகன் வெளியேற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைக்க முடியாது. சிநேகன் - 39 புள்ளிகள், ஆரவ் - 36 புள்ளிகள், பிந்து மாதவி - 36 புள்ளிகள், கணேஷ் வெங்கட்ராம் - 31 புள்ளிகள் பெற்று முதல் 4 இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
சிநேகனிடம் தங்க டிக்கெட்டை வழங்க முதல் முறையாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார் கமல். சிறிது நேரம் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார்.
முதல் 4 இடங்களில் சிநேகனைத் தொடர்ந்து, இறுதிப் போட்டிக்கும் இன்னும் 3 இடங்கள் பாக்கியுள்ளது. ஆகவே, இனி வரும் காலங்களில் சுஜா, கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், பிந்து மாதவி, ஹரிஷ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT