Last Updated : 13 Sep, 2017 09:33 AM

 

Published : 13 Sep 2017 09:33 AM
Last Updated : 13 Sep 2017 09:33 AM

நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு

தாங்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்திக்கு தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு தெரிவித்திருப்பது தமிழ்த்திரையுலகத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு வீடியோ தொழிலில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வந்ததாகத் தெரிகிறது. அந்தக் குழுவினர் tamilgun.com என்ற இணையதள உரிமையாளர் கவுரி சங்கரை தொடர்ந்து 6 மாதங்களாக கண்காணித்து வந்ததோடு, திருட்டு விசிடி தயாரிக்க மாஸ்டர் காப்பியை தருவதற்காக சென்னைக்கு அழைத்திருக்கின்றனர். அவர்களது அழைப்பை ஏற்று கவுரிசங்கர் சென்னை திருவல்லிக்கேணிக்கு வந்தார். அப்போது, கவுரி சங்கரை திருவல்லிக்கேணி போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இவர் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத்தின் அட்மின் எனத் தகவல் வெளியானதால் சமூக வலைதளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது 'தமிழ் ராக்கர்ஸ்' ட்விட்டர் பக்கத்தில் 'தவறான செய்தி' என்று பதிவிட்டார்கள்.

மேலும், கைது செய்யப்பட்ட கவுரி சங்கர் 'Tamil Gun' என்ற இணையத்தின் அட்மின் என செய்திகளை வெளியிட்டார்கள். ஆனால் 'Tamil Gun' ஃபேஸ்புக் பக்கத்தில் "அப்பாவிகளை கைது செய்வதை நிறுத்துங்கள். எங்களுடைய அட்மின் கைது செய்யப்படவில்லை. 'துப்பறிவாளன்' படத்தை முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.

தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரண்டு இணையதளங்களுமே "தாங்கள் கைது செய்யப்படவில்லை" என்று தெரிவித்திருப்பதால் தமிழ் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x