Published : 22 Sep 2017 07:51 AM
Last Updated : 22 Sep 2017 07:51 AM

கலை இயக்குநர் ஜி.கே. காலமானார்

திரைப்பட கலை இயக்குநர் ஜி.கே. நேற்று முன்தினம் நள்ளிரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61.

ஜி.கே. எனப்படும் கோபிகாந்த், 200 படங்களுக்கு மேல் கலை இயக்குநராக பணியாற்றியவர். சின்னத்திரையில் ‘கலசம்’ ‘தங்கம்’, ‘கங்கா’ தொடர்களிலும் நடித்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த அவர், திரைப்படத் துறைக்கு வந்த பிறகு சென்னையில் வசித்து வந்தார். அவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவி, ஹேமா என்ற மகள், கிருஷ்ணகாந்த் என்ற மகன் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு நேற்று மாலை போரூர் மின் மயானத்தில் நடைபெற்றது. முன்னதாக அவரது உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், நடிகர் சங்கத் தலைவர் நாசர், சரத்குமார், மனோபாலா, நெப்போலியன், ராதிகா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x