Last Updated : 16 Sep, 2017 03:00 PM

 

Published : 16 Sep 2017 03:00 PM
Last Updated : 16 Sep 2017 03:00 PM

நட்பை மிக அழகாக மாற்றிவிட்டீர்கள்: மாதவனுக்கு சூர்யா நன்றி

'மகளிர் மட்டும்' படத்திற்கு நன்றி தெரிவித்து மாதவனுக்கு சூர்யா குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மகளிர் மட்டும்'. சூர்யா தயாரித்திருந்தார். செப்டம்பர் 14-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இப்படத்தில் மாதவன் கவுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து சூர்யா குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் சகோதரர் மாதவனுக்கு, எனக்கு வார்த்தைகள் போதவில்லை, உங்களுக்கு நன்றி சொல்லி மாளாது. நான் உங்களை ஒரு விஷயத்துக்காக அழைத்தேன், ஆனால் நான் குறிப்பிட வேண்டியதை நீங்கள் முன் கூட்டியே புரிந்து கொண்டு, "கவலையை விடுங்கள்.. செய்து முடித்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினீர்கள், உங்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் ப்ரோ. நட்பை மிக அழகாக மாற்றிவிட்டீர்கள்.

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x