Last Updated : 20 Sep, 2017 02:00 PM

 

Published : 20 Sep 2017 02:00 PM
Last Updated : 20 Sep 2017 02:00 PM

இளைஞர்களுக்காக ஓர் ஆவணப் படம் இளைஞர்கள் என்னும் நாம்

இளம் தலைமுறையினர் அரசியல் குறித்த விவாதத்தை தொடங்கும் விதமாக ‘இளைஞர்கள் என்னும் நாம்’ என்ற ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளனர் கவிஞர் கபிலன் வைரமுத்து குழுவினர்.

இதுகுறித்து கபிலன் வைரமுத்து கூறும்போது, ‘‘இன்றைய சூழலில் இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு குறித்த புரிதலையும், அடுத்தகட்ட நகர்வையும் முன்வைக்கும் விதமாக இந்த ஆவணப் படம் தயாராகியுள்ளது. 2000-ல் ‘மக்கள் அணுக்கப் பேரவை – மாணவர் இயக்கம்’ உருவான கதை, அது முன்னெடுத்த நடவடிக்கை, சந்தித்த சவால்கள் ஆகியவற்றை இதில் பதிவு செய்துள்ளோம்.

இன்றைய அரசியல் சூழலில் இளைஞர்கள் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் இது பிரதிபலிக்கும். அதேபோல, 2010 வரை தீவிர செயல்பாட்டில் இருந்த எங்கள் மாணவர் இயக்கம் சில ஆண்டுகள் தடைகளால் செயல்படாமல் இருந்த காரணங்களும், அடுத்து என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறோம் என்பதையும் 36 நிமிடங்கள் கொண்ட இந்தப் படம் வழியே காணலாம்’’ என்கிறார்.

இந்த ஆவணப் படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார். இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த வாரம் வெளியிட உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x