“நான் கல்லூரிக்கு சென்றதேயில்லை” - ‘பொன்னியின் செல்வன் 2’ ஆந்த்தம் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான்

“நான் கல்லூரிக்கு சென்றதேயில்லை” - ‘பொன்னியின் செல்வன் 2’ ஆந்த்தம் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான்
Updated on
1 min read

நான் இதுவரை கல்லூரி பக்கமே சென்றதில்லை என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் - 2’ ஆந்த்தம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. படம் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “நான் இதுவரை கல்லூரிக்குச் சென்றதேயில்லை. இப்போது கல்லூரிக்கு வந்திருக்கிறேன். நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம். எதிர்கால இந்தியாவாக இருக்கப்போகும் இங்குள்ள கூட்டத்தைப் பார்த்து பயப்படுகிறேன்.

ஆரம்பத்தில் இந்த கீதத்தை உருவாக்கியதன் பின்னணியில் எந்த உள்நோக்கமும் இல்லை. மணிரத்னம் இந்த ஆல்பத்தை இயக்கும்படியாக ஒரு பாடலை விரும்பினார். அப்போதுதான் இந்த ஆந்த்தம் உருவாகியது. ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் பிண்ணனி இசையை 3, 4 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டோம். லண்டன், துபாய், பாம்பே என பல இடங்களில் இதற்காக வேலைபார்த்திருக்கிறோம். எனக்கு இசையில் கொஞ்சம் மாற்றம் தேவைப்படும். சிலது மணிரத்னத்திற்குப் பிடிக்காது. ஆகவே கலந்து பேசி பின்னணி இசையை உருவாக்கியிருக்கிறோம்” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி பேசும்போது, “அலை கடலா.. பாடல் போன்ற பாடல் முதல் பாகத்தில் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்தப் பாடலையும், இந்த பிஎஸ் கீதத்தையும் எழுதியவர் சிவா ஆனந்த் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

சுமார் 6ஆயிரம் மாணவர்கள் முன்னிலையில், 'பிஎஸ்கீதம்' பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார் . பெருத்த கைதட்டல்களுக்கிடையே ஒன்ஸ் மோர் கேட்டு மீண்டும் பாடல் பிளே ஆனது. முடிவில், இப்பாடல் ஆசிரியரும் மெட்ராஸ் டாக்கீஸ் இணை தயாரிப்பாளருமான சிவா ஆனந்த் நன்றி தெரிவித்து பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in