Published : 30 Sep 2017 02:16 PM
Last Updated : 30 Sep 2017 02:16 PM
டி.ராஜேந்தர் குறித்த சர்ச்சை தொடர்பாக தன்ஷிகா தனது பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் தன்ஷிகா பேசும்போது, மேடையிலிருந்த அனைவரையும் பற்றி பேசிவிட்டு டி.ராஜேந்தரை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசவந்த டி.ராஜேந்தர், தன்ஷிகாவை கடுமையாக சாடினார். இடையே தன்ஷிகா "மன்னிக்க வேண்டும். வேண்டுமென்றே குறிப்பிடாமல் இல்லை. மறந்துவிட்டேன். உங்கள் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்புள்ளது. " என்று கூறினார்.
ஆனாலும், டி.ராஜேந்தர் இறுதிவரை கடுமையாக சாடவே, தன்ஷிகா மேடையிலே அழத் தொடங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் தன்ஷிகாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார்கள்.
இது குறித்து தன்ஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எனக்கு நேர்ந்த பாதிப்புக்காக, என்னிடம் அக்கறை மற்றும் அன்பைக் காட்டும் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த சூழல் பரிதாபமானது. தனியாக இருக்கும் பெண்ணின் நிலைமை இதுதான்
இவ்வாறு தன்ஷிகா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT