Last Updated : 17 Sep, 2017 03:54 PM

 

Published : 17 Sep 2017 03:54 PM
Last Updated : 17 Sep 2017 03:54 PM

லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை: ஏ.ஆர்.ரஹ்மான் புது முடிவு

லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி சர்ச்சையானதைத் தொடர்ந்து, கனடாவில் இந்தி மற்றும் தமிழ் என 2 நிகழ்ச்சிகளாக நடத்த ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மானின் 'நேற்று இன்று நாளை' இசை நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது. இதில் இந்தி பாடல்களை விட தமிழ் பாடல்கள் அதிகமாக இடம்பெற்றதால் அதிருப்தியுற்ற இந்தி பேசும் ரசிகர்கள் சிலர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்கள். மேலும், இது தொடர்பாக தங்களுடைய அதிருப்தியையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள்.

தற்போது அக்டோபரில் கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். லண்டன் சர்ச்சையை கணக்கில் கொண்டு, கனடாவில் 2 இசை நிகழ்ச்சிகளாக நடத்த முடிவு செய்துள்ளார்.

அக்டோபர் 20-ம் தேதி இந்தியிலும், அக்டோபர் 21-ம் தேதி தமிழிலும் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x