Published : 09 Apr 2023 03:13 PM
Last Updated : 09 Apr 2023 03:13 PM

“மக்களின் துயரை எண்ணி கிளிசரின் இல்லாமலேயே அழுதேன்” - ‘விடுதலை’ பவானி ஸ்ரீ

“மலைவாழ் மக்களை போலீஸ் இந்த அளவுக்கு டார்ச்சர் செய்திருக்கிறார்களா என்று சித்திரவதைக் காட்சிகளில் நடித்தபோது எனக்கு மன அழுத்தம் உருவாகிற அளவுக்கு கவலையடைந்தேன். கிளிசரின் தேவைப்படாமலேயே அழுதேன்” என ‘விடுதலை’ பட நாயகி பவானி ஸ்ரீ பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒரு நாள் வெற்றிமாறன் சாரிடமிருந்து போன் “ஒரு சின்ன ரோல் இருக்கு... பண்ண விருப்பம் இருக்கா?” என்றார். நான் ஆடிப் போய்விட்டேன். எவ்வளவு முக்கியமான இயக்குநர்! சின்ன கேரக்டர்களைக் கூட எவ்வளவு ஸ்ட்ராங்காக எழுதிவிடுவார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவருடைய அலுவலகத்தில் இருந்தேன். உங்க கேரக்டர் பற்றி இப்போ சொல்ல மாட்டேன். நீங்கள் ஸ்பாட்டுக்கு வாங்க... எந்தத் தயாரிப்பும் இல்லாம வரணும். அப்பத்தான் சரியாக இருக்கும்” என்றார். அதன்பிறகு ஸ்பாட்டில் அவர் காட்சியையும் அதில் என்னிடம் எதிர்பார்ப்பதையும் விளக்கிச் சொல்லும்போதே நாம் எப்படி அந்தக் காட்சியில் பேசணும் நடக்கணும் என்று தெரிந்துவிடும். மறந்தும் நடித்துவிட மட்டும் கூடாது.

முதலில் இயற்கை, இயற்கை வளங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லிவிட்டு, மலைவாழ் மக்களின் வாழ்க்கை குறித்து நிறைய எடுத்துச் சொன்னார். அவர்கள் பட்ட பல துன்ப, துயரங்கள், இப்போதும் கூட எவ்வளவு கஷ்டங்களைச் சந்திக்கிறார்கள் என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னார். அப்படிப்பட்ட ஒரு மலைவாழ் பெண்ணாக இருந்தாலும் தமிழரசி என்பவள் இயலாமை, மன வலிமை இரண்டுமே உள்ள ஒரு கதாபாத்திரம் என்பதை எனக்குச் சொன்னார். போலீஸ் இந்த அளவுக்கு டார்ச்சர் செய்திருக்கிறார்களா என்று சித்திரவதைக் காட்சிகளில் நடித்தபோது எனக்கு மன அழுத்தம் உருவாகிற அளவுக்கு எண்ணினேன். கிளிசரின் தேவைப்படாமலேயே அழுதேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x