Last Updated : 15 Sep, 2017 11:04 AM

 

Published : 15 Sep 2017 11:04 AM
Last Updated : 15 Sep 2017 11:04 AM

அரசாங்க ஊழியர்களை எச்சரிக்கும் நீதிமன்றம் எம்.எல்.ஏக்களை எச்சரிக்காதா?- கமல் கேள்வி

ஊதியமில்லை என்பது அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது அரசாங்க ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வேலை செய்யாத அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாதென்றால், குதிரை பேரத்தில் ஈடுபட்டு, சொகுசு விடுதியில் ஓய்வெடுக்கும் அரசியல்வாதிகளுக்கு?. மதிப்பிற்குரிய நீதிமன்றம், வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களை எச்சரிக்கிறது. வேலையை தவிர்த்து வரும் எம்.எல்.ஏக்களுக்கு அத்தகைய எச்சரிக்கையை தருமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x