Published : 20 Sep 2017 03:44 PM
Last Updated : 20 Sep 2017 03:44 PM
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் ஏற்பட்ட சர்ச்சையால் தன்னை வசைபாடியவர்களை கடுமையாக சாடியிருக்கிறார் காயத்ரி ரகுராம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பற்றி தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் பேசி வருகிறார்கள். இந்நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஓவியா.
அவரை யாருமே வெளியேற்றாமல், தானாகவே வெளியேறிவிட்டார். இதற்குக் காரணம் ஆரவ், காயத்ரி ரகுராம் மற்றும் ஷக்தி என்று கருதுகிறார்கள். இதனால் இவர்கள் மூவரைப் பற்றியும் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து காயத்ரி ரகுராம் வெளியேற்றப்பட்டதிலிருந்தே அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு பலரும் வசைபாடி வருகிறார்கள். இதனால் கடும் கோபமடைந்து தன்னை வசைபாடியவர்களை கடுமையாக சாடியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
உங்களது எதிர்மறைக் கருத்துகளை நான் நீக்கமாட்டேன். நான் என் முகத்திரையை உங்கள் அனைவரின் முன்னிலையிலும் நீக்கி நான் யார் என்பதை காட்டிவிட்டேன். நீங்கள் தற்போது உங்கள் முகத்திரையை விலக்கி உங்கள் எதிர்மறைப் பகுதிகளைப் பாருங்கள்.
எதிரிலோ, பின்னாலோ பேசுவதற்குரிய சுதந்திர உலகம் இது, இதில் உணர்வுகளை பகிரலாம், மீம் விமர்சனங்களை வைக்கலாம். மகிழ்ச்சியுடன் இதனைச் செய்யுங்கள். நான் யாருக்கும் அறிவுரை வழங்குவதில்லை, நான் என்ன உணர்கிறேனோ அதைத்தான் கூறுகிறேன். போரில் அனைத்துமே நியாயம்தான். கேம் என்பது கேம்தான்.
என் ட்வீட்களினால் எரிச்சலடைபவர்கள் என்னைப் பின் தொடர வேண்டாம். உங்களுக்குப் பிடித்தவர்களை, உங்கள் ரோல் மாடல்களை பின் தொடருங்கள். எனக்கு கோபமோ வெறுப்போ இல்லை. எனக்கு எதிரான வசைகளால் எனக்கு வருத்தம் உண்டாகிறது, என் மீது அவர்கள் நேரத்தை வீணாக செலவழித்து வருகின்றனர்.
நாம் எல்லோரும் எவ்வளவு வெட்டி என்பது இதிலிருந்து தெரிகிறது. அதாவது உங்களுக்குப் பிடிக்காத நபர் மீது உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்கிறேன். கிண்டல், கேலி, வசைகள் ஒரு போதும் முடியப் போவதில்லை.
இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
அவருடைய சாடலுக்குப் பதிலடியாக தங்களைத் திட்டுவதற்காக மட்டுமே, ட்விட்டர் தளத்தில் பின் தொடர்ந்து வருவதாக பலரும் பதிலளித்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT