Published : 26 Sep 2017 07:04 PM
Last Updated : 26 Sep 2017 07:04 PM
ஓவியா மிகவும் உண்மையானர், நல்ல நண்பர் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியா பேசிய 'ஷட் அப் பண்ணுங்க' என்ற வார்த்தை மிகவும் பிரபலம். அந்த வார்த்தையை வைத்து 'பலூன்' படக்குழு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் இணையத்தில் அப்பாடல் வெளியிடப்பட்டது.
மேலும், 'பலூன்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வாக இயக்குநர் சினீஷ் மற்றும் அஞ்சலி இருவரும் 'பிக் பாஸ்' வீட்டிற்குள் சென்று வந்தார்கள். அங்கு 'ஷட் அப் பண்ணுங்க' என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டு, பிக் பாஸ் போட்டியாளர்களோடு அஞ்சலியும் நடனமாடினார்.
'பிக் பாஸ்' வீட்டிற்குள் சென்று வந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் அஞ்சலி. அப்போது "ஓவியாவோடு 'கலகலப்பு' படத்தில் இணைந்து நடித்துள்ளீர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போய்விட்டு வந்தவுடன் ஓவியாவைப் பற்றி நீங்கள் கூறுவது என்ன?" என்று அஞ்சலியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்கள். அதற்கு "ஓவியா மிகவும் உண்மையானவர். நல்ல நண்பர்" என்று பதிலளித்திருக்கிறார் அஞ்சலி.
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'பலூன்' திரைப்படம், அக்டோபர் 6-ம் தேதி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT