Last Updated : 30 Sep, 2017 02:29 PM

 

Published : 30 Sep 2017 02:29 PM
Last Updated : 30 Sep 2017 02:29 PM

சென்னையில் சாமி 2 படப்பிடிப்பு தொடக்கம்

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

'துருவ நட்சத்திரம்' மற்றும் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'சாமி 2'வில் கவனம் செலுத்த திட்டமிட்டார் விக்ரம். 'ஸ்கெட்ச்' பணிகளைத் தொடர்ந்து, 'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டார் விக்ரம்.

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் 'சாமி 2' படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விக்ரம். ஆறுச்சாமி கதாபாத்திரத்துக்காக முழுமையாக மாறியுள்ள விக்ரமின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சென்னையில் தொடங்கப்பட்டுள்ள படப்பிடிப்பில் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து வட இந்தியாவில் சில முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளது படக்குழு.

இப்படத்தில் விக்ரமுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராகவும், ப்ரியன் ஒளிப்பதிவாளராகவும், மிலன் கலை இயக்குநராகவும், கனல் கண்ணன் சண்டை வடிவமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இப்படத்தை ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x