Published : 18 Sep 2017 08:29 AM
Last Updated : 18 Sep 2017 08:29 AM
சென்னையில் நடைபெற்ற 'இந்தியா - ஆஸ்திரேலியா' கிரிக்கெட் போட்டியிலும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மெர்சல்' படத்தின் விளம்பரங்கள் திரையிடப்பட்டன.
விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'மெர்சல்' படத்தினை எந்த வகையில் எல்லாம் மக்களிடையே சென்றடைய முடியுமோ, அனைத்து வகையிலும் விளம்பரப்படுத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனம். இதுவரை தமிழ் சினிமாவில் இவ்வாறு எந்தவொரு படத்துக்கும் விளம்பரப்படுத்தியதில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 'இந்தியா - ஆஸ்திரேலியா' அணிகள் இடையே முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இபோட்டிகளுக்கு இடையே 'மெர்சல்' படத்தின் டீஸர் வெளியீட்டுக்கான சிறு வீடியோ பதிவு திரையிடப்பட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் ட்விட்டர் எமோஜி, ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட வகைகளிலும் 'மெர்சல்' விளம்பரப்படுத்தப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.
அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்சல்' படத்தில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு, சத்யராஜ், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தங்களுடைய தயாரிப்பில் 100-வது படமாக பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
'மெர்சல்' பணிகளை முடித்துவிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT