Published : 20 Sep 2017 03:46 PM
Last Updated : 20 Sep 2017 03:46 PM
பிஜி தீவுகளில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த 'பார்ட்டி' படப்பிடிப்பு நிறைவுற்று சென்னை திரும்பியுள்ளது படக்குழு.
கடந்த 2 மாதங்களாக பிஜி தீவுகளில் 'பார்ட்டி' படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அங்கு படமாக்கப்பட வேண்டிய பெரும்பாலான காட்சிகளை முழுமையாக முடித்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு. சென்னையில் 10 நாட்கள் படப்பிடிப்போடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவு பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், மிர்ச்சி சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி மற்றும் நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
பிரேம்ஜி இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இப்படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ப்ரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை கவனிக்கவுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT