Published : 25 Sep 2017 08:02 PM
Last Updated : 25 Sep 2017 08:02 PM
என்னைத் தவறாகக் காட்டும் ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.
ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் தங்கம் சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ஹர ஹர மஹாதேவகி'. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், பால சரவணன், ராஜேந்திரன், கருணாகரன், மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுரளி இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடவுள்ளது.
இப்படம் குறித்து நிக்கி கல்ராணி கூறியிருப்பதாவது:
என்னுடைய எல்லா படத்தையும் போல இதுவும் நல்ல படம்தான். இப்படத்தை பற்றி ஏன் அதிக பேச்சு வருகிறது என்றால் இப்படம் வயது வந்தோருக்கான காமெடிபடம். மக்களுக்கான ஒரு பொழுதுபோக்கு படமாக தான் பார்க்கிறோம். இதில் வேண்டுமென்றே இரட்டை அர்த்த வசனங்கள் எதையும் வைக்கவில்லை. படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் சந்தர்ப சூழலில் வருவது போல் இருக்கும். இப்படத்தின் கதையைக் கேட்டு கதை பிடித்திருந்ததால்தான் நடித்தேன்.
இப்படத்தில் யாரையும் தப்பாகக் காட்டுவது போல் காட்சிகள் இல்லை. ஆபாசம் இல்லாமல் படமாக்கியிருக்கிறார்கள். படத்தைக் கூட வயது வந்தோருக்கான காமெடிப் படம் என்று தான் விளம்பரப்படுத்துகிறோம். என்னைத் தவறாகக் காட்டும் ஒரு படத்தில் நடிக்க மாட்டேன். இப்படத்தில் அப்படிபட்ட காட்சிகள் ஏதும் இல்லை.
இவ்வாறு நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT