Last Updated : 19 Sep, 2017 12:19 PM

 

Published : 19 Sep 2017 12:19 PM
Last Updated : 19 Sep 2017 12:19 PM

ஜனவரியில் விஜய் படப்பிடிப்பு தொடக்கம்: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

'ஸ்பைடர்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

'ஸ்பைடர்' படத்தின் பணிகள் முழுமையாக முடிவுற்று, செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ’துப்பாக்கி’ மற்றும் ’கத்தி’ படங்களை மாதிரி இல்லாமல் விஜய்யை வேறொரு கோணத்தில் காட்டவுள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது. விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.

மேலும், ’மெர்சல்’ பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதால் விஜய் ஓய்விற்காக வெளிநாடு சென்றிருக்கிறார். தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு தான் சென்னைக்கு திரும்ப திட்டமிட்டு இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x