Published : 14 Sep 2017 01:10 PM
Last Updated : 14 Sep 2017 01:10 PM
திரையரங்குகளில் 'துப்பறிவாளன்' படத்தை பதிவு செய்பவர்களை கண்காணிக்க பறக்கும் படை ஒன்றை விஷால் நற்பணி இயக்கம் களமிறக்கியுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் 'துப்பறிவாளன்' தமிழகமெங்கும் இன்று (செப்டம்பர் 14) வெளியாகியுள்ளது. இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி மற்றும் நந்தகோபால் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் திருட்டு விசிடி-க்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் விஷால். இணையதளங்களில் புதிய படங்களை பதிவேற்றம் செய்யும் கவுரி சங்கர் என்பவரை சமீபத்தில் காவல்துறை கைது செய்துள்ளது. இவரின் மீது தயாரிப்பாளர் சங்கம் புகார் ஒன்றை அளித்துள்ளது.
இந்நிலையில், 'துப்பறிவாளன்' படத்தை திரையரங்குகளில் பதிவு செய்து பரப்புவதை தடுப்பதற்கும், பதிவு செய்பவர்களை கண்காணித்து காவல் துறையினரிடம் பிடித்துக் கொடுக்கவும் தமிழகம் முழுவதும் பறக்கும் படை ஒன்றை விஷால் நற்பணி இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 5 பேர் கொண்ட குழுக்களாக தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், எல்லா காட்சிகளிலும் கண்காணிக்க இருக்கிறார்கள். இதற்காக பறக்கும் படைக்கென்று பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT