Published : 26 Sep 2017 12:56 PM
Last Updated : 26 Sep 2017 12:56 PM
’ஹரஹர மஹாதேவகி’ படத்தில் ஆபாச காமெடி இல்லை என்று அப்படத்தின் நாயகன் கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் தங்கம் சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ஹர ஹர மஹாதேவகி'. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, சதீஷ், பால சரவணன், ராஜேந்திரன், கருணாகரன், மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுரளி இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடவுள்ளது.
இப்படம் குறித்து கவுதம் கார்த்திக் கூறியிருப்பதாவது:
'ஹரஹர மஹாதேவகி' கதையை கதையாகத் தான் பார்த்தேன். இது முழுமையான காமெடி படம். ஒரு இடத்தில் நான்கு நண்பர்கள் கூடினால், எப்படி பேசிக்கொள்வார்களோ அதே போல் தான் காட்சிகள் இருக்கும். இப்படத்தை ஏன் குடும்பத்தோடு பார்க்ககூடாது என்று சொல்கிறோம் என்றால் , நாம் நம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும் சில விஷயத்தை குடும்பத்தினர் முன்பு கண்டிப்பாக பேசமாட்டோம். அதனால் தான் இப்படத்தை வயது வந்தோருக்கான படம் என்று சொல்கிறோம்.
’ஹரஹர மஹாதேவகி’ , ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தையும் இளைஞர்கள் அனைவரையும் மனதில் வைத்து தான் தேர்ந்தெடுத்து நடித்துள்ளேன். இவ்விரண்டு படங்களில் நடிப்பது கண்டிப்பாக ஒரே மாதிரி ஆகாது என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் நிறைய கதைகளில் நடித்துள்ளேன் அதே போல் தான் இப்படமும். இது வயது வந்தோருக்கான காமெடி தான், ஆபாச காமெடி இல்லை. இங்கே யாருக்கும் வயது வந்தோருக்கான காமெடி பற்றிய சரியான புரிதல் இல்லை. 'ஹரஹர மஹாதேவகி' இளைஞர்கள் ரசிக்கும் படமாக இருக்கும்
இவ்வாறு கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT