Published : 14 Sep 2017 08:08 AM
Last Updated : 14 Sep 2017 08:08 AM
கவுரி சங்கர் கைது செய்யப்பட்டது குறித்து தயாரிப்பாளர் கள் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியதாவது:
இங்கே இணையம் வழியே புதிய படங்களை வெளியிடுவது மென்மையான குற்றமாக (சாஃப்ட் கிரைம்) பார்க்கப்படுகிறது. ரூ.100 கோடி மதிப்பிலான படம் திருடப்படுவது இங்கே பெரிய விஷயமாக பார்க்கப்படுவதில்லை. மக்களும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதில் ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்களின் வலி இருப்பதை பலரும் உணர்வதில்லை.
கவுரி சங்கர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்குப் பின்னால் செயல்பட்டு வருபவர்களும் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள். தமிழ் ராக்கர்ஸ் வலைதளத்தை சேர்ந்தவர்கள் எங்கிருந்து செயல்பட்டு வருகிறார்கள் என்பதையும் கண்டுபிடித்துவிட்டோம். தற்போது கவுரி சங்கர் சரியான ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டதைப் போல அவர்களும் பிடிபடுவார்கள். சரியான நேரத்துக்காக காத்திருக்கிறோம்.
சில ஆயிரம் ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு சினிமா தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் சில ஊழியர்களும் இதற்கு துணையாக இருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். தற்போது ஆன்லைன், கேபிள், பேருந்துகள் வழியே புதிய படங்களை வெளியிடுவதையும், ஒளிபரப்புவதையும் நிறுத்தும் பணியில் இறங்கியுள்ளோம். அடுத்தக்கட்ட முயற்சியாக புதிய படங்களின் பதிவிறக்க குற்றத்தில் திரைத்துறை சார்ந்தவர்கள் தொழில்நுட்ப ரீதியாக செய்து வரும் உதவிகளும் கண்டுபிடிக்கப்படும். அவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக் கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT