Published : 27 Sep 2017 09:53 AM
Last Updated : 27 Sep 2017 09:53 AM

தொழில் அதிபர் வருண்மணியனை தாக்கிய 2 பேர் கைது

சென்னை, ஆழ்வார்பேட்டையில் வசிப்பவர் வருண்மணியன் (35). தொழில் அதிபரான இவரது அலுவலகம் நந்தனத்தில் உள்ளது. வருண்மணியனுக்குத் தொடர்ச்சியாக தொலைபேசியில் மிரட்டல் அழைப்புகள் வந்ததைத் தொடர்ந்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், நேற்று அலுவலக பணிகள் முடிந்து லிஃப்ட்டில் அவர் கீழே இறங்கும்போது, லிஃப்ட்டுக்குள் இருந்த 2 பேர் வருண்மணியனை ஸ்குருடிரைவரால் தாக்கியுள்ளனர். இதில் அவரது கை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது. 4-வது தளத்தில் லிஃப்ட் கதவு திறந்தபோது அலுவலக ஊழியர்கள் ஓடிவந்து, தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சைதாப்பேட்டை போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் சைதாப்பேட்டையைச் சேர்ந்த முத்துக்குமார்(30), பாலமுருகன்(29) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் வருண்மணியத்தை எதற்காக தாக்கினார்கள் என்பது குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x