Published : 27 Feb 2023 07:49 PM
Last Updated : 27 Feb 2023 07:49 PM

ஏப்.14-ல் வெளியாகிறது விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’

விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரே இயக்கவும் செய்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலம் பெற்று வரும் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என விஜய் ஆண்டனி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே தயாரித்து படத்தொகுப்பும் மேற்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x