Published : 25 Sep 2017 02:53 PM
Last Updated : 25 Sep 2017 02:53 PM
அரசியலுக்கு வருவேன், தனிக்கட்சி தொடங்குவேன் என்றெல்லாம் கமல் ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில் கட்சி தொடங்குவது எப்போது என தனியார் தொலைக்காட்சிக்கு கமல் பேட்டியளித்துள்ளார்.
தமிழக அரசியலில் அதிமுக சர்ச்சைகளுக்கு நிகராக பரபரப்பாக பேசப்படுகிறது நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம். ஏனெனில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதையே இன்னும் உறுதி செய்யாத நிலையில் கமல்ஹாசனோ ஒருபடி முன்னே சென்று அரசியலுக்கு வருவேன்; தேவைப்பட்டால் முதல்வராவேன் என பகிரங்கமாக கூறியுள்ளார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "இதற்கு முன்னர் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தேன். அவர்கள் நான் கட்சி எப்போது தொடங்குவேன் எனக் கேட்டார்கள். அவர்களே 30 நாளா, 60 நாளா, 100 நாட்களா என பல ஆப்ஷன்களைக் கொடுத்தார்கள். அப்போது எனக்குத் தோதான ஒரு கால அவகாசத்தை நான் கூறினேன்.
நான் இப்போதுதான் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டிருக்கிறேன். அரசியல் என்பது சாதாரண விஷயமல்ல. அதில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் நான் செயல்பட முடியாது. எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து விரைவில் உரிய அறிவிப்பை வெளியிடுவேன். புத்தாண்டை ஒட்டி அறிவிக்கலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT