Published : 15 Feb 2023 04:56 PM
Last Updated : 15 Feb 2023 04:56 PM

கேஜிஎஃப் பகுதியில் தொடங்கியது ‘தங்கலான்’ படப்பிடிப்பு

நடிகர் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கேஜிஎஃப்பில் புதன்கிழமை தொடங்கியது..

இயக்குநர் பா.ரஞ்சித்துடன் நடிகர் விக்ரம் இணைந்துள்ள படம் ‘தங்கலான்’. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், கர்நாடகாவில் உள்ள கேஜிஎஃப்பில் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இப்போது தொடங்கி இருக்கிறது.

சென்னை, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்ததை அடுத்து, தற்போது கேஜிஎஃப் பகுதியில் இதன் படப்பிடிப்பை படக்குழு தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ‘தங்கலான்’ படத்திற்காக நடிகை பார்வதி உடல் எடை குறைத்ததாகவும், இதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது.

படத்திற்காக நடிகை மாளவிகா மோகனனும் சிலம்பு உள்ளிட்ட கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்து மேமாதம் படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x