Published : 03 Feb 2023 08:23 PM
Last Updated : 03 Feb 2023 08:23 PM

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் ஷாம்

இயக்குநர் விஜய் மில்டன் இயக்க உள்ள புதிய படத்தில் நடிகர் ஷாம் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் '12 பி' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத் தொடர்ந்து 'இயற்கை', '6 மெழுகுவர்த்திகள்' உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் அவர் இணைந்து நடித்த 'வாரிசு' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்குநர் விஜய் மில்டனுடன் இணைகிறார். விஜய் மில்டன் இயக்கிவரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஷாம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

Vijay Milton: My film with Vijay Antony is going to be a new experience for  me | Tamil Movie News - Times of India

முன்னதாக, விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமாரை வைத்து விஜய் மில்டன் இயக்கிய 'மழை பிடிக்காத மனிதன்' படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x