Published : 24 Dec 2016 03:19 PM
Last Updated : 24 Dec 2016 03:19 PM
திரையுலகில் நீண்ட காலம் ஒதுங்கி இருந்த வடிவேலுவின் மறுபிரவேசம், வடிவேலு- சூரி இணை, வடிவேலு- சுராஜ் கூட்டணி 'கத்தி சண்டை' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மறுபுறமோ கோவை சரளாவை முதன்மைப்படுத்தியதாகச் சொல்லப்பட்ட 'பலே வெள்ளைய தேவா' படம் பட்டையைக் கிளப்புவோம் என்றது.
இரு படங்களும் திரை ரசிகர்களை மகிழ்வித்தனவா என்பது குறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
விஷால், சூரி, தமன்னா, சுராஜ் என லைன் கட்டினாலும் வடிவேலுவின் கம்பேக் என்கிற காரணத்திற்காக மட்டுமே 90% பேர் தியேட்டருக்குள் அடியெடுத்து வைத்திருப்பார்கள். ஆனால் நடந்தது என்ன?
மருதமலை மட்டுமே சுராஜின் அடையாளம். படிக்காதவன் ஒரு சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டியது. அதற்குப்பின் சூரக்கடி காமெடி படங்கள் எடுத்தார் சுராஜ். கத்தி சண்டையில் வயிற்றுக்குள் வாளை சொருகி முதுகு வழியே எடுத்துவிட்டார். என்னது கதையா? ஆனாலும் நீங்க ரொம்பத்தான் காமெடி போங்க.
சுராஜ்... சீக்கிரம் விருப்பு ஓய்வு வாங்கிடுங்க. இல்லன்னா உங்க கற்பனை குதிரைய சர்வீஸுக்கு விடுங்க. இப்போதைக்கு ஆளை விடுங்க.
கத்தி சண்டை... ரொம்ப யோசித்துதான் போனேன். எதிர்பார்த்ததை விட மோசம்தான்..
சூரியும் வடிவேலும் இல்லை என்றால் ஆரம்பித்த அடுத்த நிமிடம் வெளியே வந்து விடலாம். அதையும் கொஞ்சம்தான் ரசிக்க முடிகிறது. இந்த படத்துக்கா விஷால் இவ்ளோ பில்டப் கொடுத்தார்???
தேவையே இல்லாத இடத்தில் பாட்டு தமிழ் படங்களின் சாபமோ? மக்களை முட்டாள் என்றே நினைத்து படம் எடுப்பார்களோ?? கத்தி சண்டை.. பழைய துருப்பிடித்த கத்தி..
உலகத்துலயே கஷ்டமானது பிறந்த ஊரை விட்டு விலகிப்போவதுதான் #கத்திசண்டை
'கத்திசண்டை' படத்தை யாருக்காவது பார்க்கணும்னு தோணினா சண்முகப்பாண்டியன் நடிச்ச 'சகாப்தம்' படத்தை பாருங்க.. இத விட நல்லா இருக்கும்.
கத்திசண்டை படத்தை இணையத்தில் பார்ப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் #விஷால். விடுங்க தம்பி கத்தி சண்டை படத்தை எல்லாம் பார்க்குறதே கடுமையான தண்டனைதான்.
கத்தி சண்டை – சுராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் இதுவரையில் குப்பையாகத்தான் இருந்தது எனும் போது ‘கத்தி சண்டை’யும் அவ்வாறே இருக்கும் என்பதில் எனக்கு துளி சந்தேகமும் இல்லை. அவ்வாறே ஆயிற்று.
ஆனால் அவரின் திரைப்படங்களில் ‘காமெடி’ போர்ஷன்கள் மலினமான தரத்தில் இருந்தாலும் மூளையைக் கழற்றி வைத்து விட்டால் சற்று ரசிக்கத்தக்க வகையில் இருக்கும். ‘தலைநகரம்’, ‘மருதமலை’, ‘படிக்காதவன்’ போன்றவற்றின் நகைச்சுவையை அவ்வாறு சொல்ல முடியும். அதற்கு முழுக்க வடிவேலுவே காரணம்.
எனவே ‘கத்தி சண்டை’ திரைப்படத்தின் மூலம் வடிவேலுவின் மறுவருகை நிகழப் போகிறது என்பதால் ஆவல் பிறந்தது உண்மைதான். ஆனால் கூடவே சற்று அவநம்பிக்கையும் இருந்தது. மாப்பூ.. வெச்சிட்டியே.. ஆப்பு..
கத்தி சண்டை பார்த்து பழகி போன கதை. கத்தி, சிட்டிசன் என பல படங்கள் நினைவுக்கு வந்து செல்கின்றது, இதில் மெமரி லாஸ் வேறு. மொத்தத்தில் கத்தி சண்டை விஜய்யின் கத்தி அளவிற்கு எதிர்பார்த்தால் வந்திருப்பது, சுந்தர்.சி-யின் சண்டை அளவிற்கு தான்.
கத்தி சண்டை- கடக்க முடியாமலும், மீளாமலும்
#கத்திசண்டை இந்த நேரத்தில் ஒரு நல்ல படம். ஒரு சில அரசியல் வாதிகள் இந்த படத்தை பார்த்தால் திருந்துவார்கள். #corruptionbaned
கத்தி சண்டை படத்துக்கு யாரும் கதையை எதிர்பார்த்து போய்விடவேண்டாம்.
Rajesh Kumar
#கத்திசண்டை- கத்தியே இல்லாமல் ரத்தம் வருகிறது!!!
தமிழ் சினிமா காமெடிப் பட ரசிகர்களுக்கு இது ரொம்ப மோசமான காலம். காமெடிக்கு ரொம்ப வறண்டு போன காலமும் கூட. ஹிப்ஹாப் தமிழாவோட பாட்டெல்லாம் காதுல பொக்லைன் வச்சி நோண்டி விடுற மாதிரி இருக்கு. அதுலயும் எல்லா பாட்டையும் அவரே பாடுவேன்னு அடம் புடிக்கிறாரு.
சில மாதங்களுக்கு முன்னால பணத்தோட மூணு கண்டெய்னர் மாட்டுனது எல்லாருக்கும் தெரியும். நமக்கு தெரிஞ்ச இந்த மேட்டர் சுராஜுக்கு தெரியாம இருக்குமா? அவ்வளவுதான். இதையும் அவர் சமீபத்துல பாத்த ஒரு சில தெலுங்குப் படங்களையும் மிக்ஸ் பண்ணி பட்டுன்னு ஒரு படத்த எடுத்து விட்டுட்டாப்ல.. எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பார்த்தீங்களா?
பலே வெள்ளைய தேவா எப்படி?
சசிகுமார் வழக்கமான கிராமத்து கதையில் ஜொலிக்கிறார். நாயகி தன்யாவுக்கு இதான் முதல் படம். அழகாய் அம்சமாய் வந்து செல்கிறார்.
சசிகுமார் படங்கள்ல செட் ப்ராபர்ட்டி லிஸ்ட்ல நாலு பாட்டிங்கன்னு எழுதுவாங்க போல.
'சுப்ரமணியபுரம்'னு ஒரு படம் குடுத்துட்டு அடுத்து ஒரு பிளாப் குடுத்துட்டு, ஹீரோவாவே நடிக்க முடிவு எடுத்ததற்கு வாழ்த்தும் அந்த வேளையில்...
சும்மா ஒரே மாதிரி படம்... ஹீரோயின் உங்க பின்னாடியே சுத்துற மாதிரி எல்லாம் எடுக்காதீங்க. நீங்க சாக்லேட் பாய் மாதிரி எல்லாம் இல்லை. அதையும் புரிஞ்சுக்கோங்க..!! உங்களின் 'பலே வெள்ளைய தேவா' வெற்றி அடைய வாழ்த்துகள்.
இப்படி பாதியிலயே ஓடிவர வச்சிட்டியேப்பா... பலே வெள்ளைய தேவா.
சசிகுமாரின் சுப்ரமணியபுரம்.. பத்தோடு பதினொன்றாய் வரக்கூடிய படம்தான்னு நினைச்சு டிக்கெட் வாங்கி உட்கார்ந்தவனை நான்காவது காட்சியிலேயே எல்லாப்படம் போல இது இல்லை என்று கூர்ந்து பார்க்க வைத்து முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்து சசிகுமார்னா யாருன்னு புருவத்தை உயர வச்சீங்க..!
தொடர்ந்து நாடோடி, சுந்தரபாண்டியண்னு நட்பையே மையமா வச்சி ஹாட்ரிக்கும் அடிச்சீங்க..!! அப்புறம் குட்டிப்புலி, வெற்றிவேல், கிடாரின்னு கூட கொஞ்சம் சுமாராத்தானே போய்ட்டிருந்துச்சி.. இப்ப என்ன ஆச்சு..?
அங்கே பாலிவுட்டில் தங்கல் போன்ற படங்கள் வரும் அதே நேரத்தில் #கத்திசண்டை #பலேவெள்ளையதேவா படங்கள் கோலிவுட்டில் வெளியானது என்ன மாதிரியான குறியீடு?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT