Published : 31 Dec 2022 03:27 PM
Last Updated : 31 Dec 2022 03:27 PM

வெற்றிமாறனின் ‘விடுதலை’ முதல், இரண்டாம் பாக படப்பிடிப்பு நிறைவு

வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

இந்நிலையில், 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 'விடுதலை' முதல் பாகத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x