Published : 05 Dec 2022 06:06 PM
Last Updated : 05 Dec 2022 06:06 PM
சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் போட்டிப் பிரிவில் 12 தமிழ்ப் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பன்மொழி உலக சினிமாக்கள் திரையிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி டிசம்பர் 22-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ‘ஆதார்’, ‘பிகினிங்’, ‘கார்கி’, ‘இரவின் நிழல்’, ‘கசடதபற’, ‘பபூன்’, ‘கோட்’,‘இறுதிபக்கம்’, ‘மாமனிதன்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘ஓ 2’, ‘யுத்த காண்டம்’, ஆகிய 12 தமிழ் திரைபடங்கள் போட்டிப் பிரிவுக்கு திரையிட தேர்வாகியுள்ளன.
இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் நடத்தப்படும் இந்த திரைப்பட விழாவில் ‘இந்தியன் பனோராமா’ பிரிவின் சார்பில் 15 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அவை முறையே, ‘அப்பன்’ (மலையாளம்), ‘போட்போடி’ (பெங்காலி), ‘சினிமா பண்டி’ (தெலுங்கு), ‘தபாரி குருவி’ (இருளர்), ‘எக்தா காய் ஜலா’ (மராத்தி), ‘ஹடினெலெண்டு’ (கன்னடம்), ‘கடைசி விவசாயி’ (தமிழ்), ‘மாலை நேர மல்லிப்பூ’ (தமிழ்), ‘மஹாநந்தா’ (பெங்காலி), ‘போத்தனூர் தபால் நிலையம்’ (தமிழ்), ‘பிரதிக்சயா’ (ஒரியா), ‘சௌதி வெல்லக்கா’ (மலையாளம்), ‘தயா’ (சமஸ்கிருதம்), ‘தி ஸ்டோரி டெல்லர்’ (இந்தி) உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT