Published : 27 Nov 2022 01:58 PM
Last Updated : 27 Nov 2022 01:58 PM
இரவின் நிழல் படத்திற்கு 113 சர்வதேச விருதுகள் கிடைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ள படத்தின் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், இன்னும் வந்துகொண்டேயிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். உலக அளவில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இந்தப் படம் உருவானதாக படக்குழுவால் சொல்லப்பட்டது. 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் மற்றும் நகராத செட்டுகள் மூலம் காட்சிகள் உருவாக்கப்பட்டன.
இந்த படம் அண்மையில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்போது படம் உலகத்திலேயே இரண்டாவது நான் லீனியர் சிங்கிள் ஷாட் எனவும், முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் எனவும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து பார்த்திபன் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது படத்தின் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், “Jaipur international film festival-லில் தேர்வு செய்யப்பட்ட 5 திரைப்படங்களில் ஒன்று ‘IN’ ! எண்ணிப்பார்க்க சிரமமாயிருந்ததால் 113-ஐ 115 என என் உதவியாளர் கூற, நானும் அதை மைக்கில் கூறிவிட்டேன். actually 113 international awards. இன்னும் வந்து கொண்டேயிருக்கிறது. IN making விரைவில் வரும்” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT